பயிர் பாதுகாப்பு :: கரும்பு பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
|
கரையான்: ஓடனோடெர்மஸ் ஓபிசஸ்
|
தாக்குதலின் அறிகுறிகள்:
- வளரும் கரும்பின் சோகையின் ஓரங்களில் அரை வட்டமாக கரையான் கடித்தது போல் தென்படும்
- நடவு செய்த கரணைகள் சரியாக முளைக்காமல் இருத்தல்,
- முதலில் வெளிப்புற இலைகள் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்து போதல் பின்பு உட்புற இலைகளும் காய்தல்,
- இறுதியில் முழுக்குருத்தும் காய்ந்து இழுக்கும்போது கையோடு வந்து விடுதல்.
- விதைக் கரணைகள் உட்புறத் திசுக்களின்றி கரையான் மண் காணப்படுதல், கரும்பு முழுவதும் காய்ந்து போதல் போன்றவை கரையான் தாக்குதலின் அறிகுறிகளாகும்.
|
|
|
|
|
|
|
இலைகளில் அரை வட்ட வெட்டு |
|
காய்ந்த வெளி இலைகள் |
மண் நிரப்பப்பட்ட கரணைகள |
|
பூச்சியின் விபரம்:
- முட்டைகள் : சிறுநீரக (கிட்னி) வடிவில், சேர்ந்து காணப்படும். 30-90 நாட்களில் பொரித்துவிடும்.
- இளம்குஞ்சுகள் : 8-9 முறைகள் தோலுரித்துப் பின் 6-12 மாதங்களில் முழு வளர்ச்சி பெறும்.
- வளர்ந்த பூச்சிகள்: பழுப்பு கலந்த வெண்ணிற எறும்பு போன்ற சிறு பூச்சிகள், தலை அடர் நிறத்தில் காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறை:
உழவியல் முறைகள்:
- நடவு செய்யும்போது வெள்ளநீர்ப் பாசனம் செய்வதால் ஈரத்தன்மை அதிகமாக இருப்பதால் கரையானை கட்டுப்படுத்தலாம்.பாதிப்புள்ள பகுதிகளில் குறைந்த இடைவெளியில் அடிக்கடி நீர் பாசனம் வெய்ய வேண்டும்.
- வயலில் இடைவேளி உள்ள இடங்களை நிரப்புதல்.
இயற்பியல் முறைகள்:
- கரையான் கூடுகளைக் கண்டறிந்து அழித்தல். கரையான் மருந்தினை மன்னில் இட்ட பின்பு குறைவாக நீர் பாய்ச்ச வேண்டும்.
- கரையானால் தாக்கப்பட்ட கரும்பு அல்லது விதைக் கரணைகளை வயலிலிருந்து அகற்றி அழித்து விடவேண்டும்.
இரசாயன முறைகள்:
- இமிடகுளோப்ரிட் 70 டபிள்யூ.எஸ் மருந்தினை 0.1% அல்லது குளோர்பைரிபாஸ் 20 (இ.சி) சி 0.04% மருந்தில் விதைக் கரணைகளை 5 நிமிடம் நனைத்து எடுத்துப் பின் நடுவது சிறந்த பலன் தரும்.
|
|
கரையான் |
|
Content Validators:
Dr.V.Jayakumar, Senior Scientist (Plant Pathology), Sugarcane Breeding Institute, Coimbatore -641007.
Dr.T.Ramasubramanian, Senior Scientist (Entomology), Division of Crop Protection, Sugarcane Breeding Institute, Coimbatore -641007.
Dr.M.Ravi, Assistant Professor (Entomology), Krishi Vigyan Kendra, Sirugamani- 639115 |
|